முகப்பு
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் பங்கில் கொள்ளை; பிடிக்க முயன்றவர் சுடப்பட்டார்

பண்ருட்டி, பிப்.19: பண்ருட்டியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. தகவல் அறிந்து பிடிக்க முயன்றவரை சுட்டுவிட்டு தப்பினர் கொள்ளையர்கள். பண்ருட்டி பாவைகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:15 PM
பகிர்:

பண்ருட்டி, பிப்.19: பண்ருட்டியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. தகவல் அறிந்து பிடிக்க முயன்றவரை சுட்டுவிட்டு தப்பினர் கொள்ளையர்கள்.

பண்ருட்டி பாவைகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். லாரி டிரைவரான இவர் தனது லாரிக்கு டீசல் போடுவதற்காக அதிகாலை 4.30 மணி அளவில் அருகில் உள்ள கொள்ளுக்காரன்பேட்டை பெட்ரோல் பங்க்குக்கு சென்றுள்ளார். பெட்ரோல் போடுவதற்கு ஊழியர்கள் இல்லாத நிலையில், பங்க்கின் உள்ளே ஒரு கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அங்கே சென்று பார்த்துள்ளார். அப்போது, பங்க் ஊழியர்கள் கார்த்திகேயன், சண்முகம் இருவரும் கயிறால் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, வங்கியில் ரூ.52 ஆயிரத்தைக் கொள்ளை அடித்துவிட்டு இப்போதுதான் கொள்ளையர்கள் சென்றனர்; நீங்கள் சென்றால் அவர்களைப் பிடித்துவிடலாம் என்று கூறியிருக்கிறார்கள். உடனே அவர் தனது நண்பரான மருங்கூரைச் சேர்ந்த அருள் என்பவருக்கு போன் செய்து, கார் எடுத்துவரச் சொல்லியுள்ளார். அவரும் உடனே வரவே, அந்தக் காரில் ஏறி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட மூவரும் சாலையில் தேடியுள்ளனர்.  அங்கே சற்று இருளடைந்த பகுதியில் கொள்ளையர்கள் 3 பேர் பதுங்கி நின்றனராம். துணிச்சலுடன் அவர்களை மடக்கிப் பிடித்த கோபாலகிருஷ்ணனை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் அவரது காலில் துப்பாக்கி ரவை பாய்ந்துள்ளது. இருப்பினும், காரில் இருந்த தனது நண்பர் உதவியுடன் கொள்ளையர்களில் ஒருவரைப் பிடித்துக் கொண்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கொள்ளையர்கள் 2 பேர் அருகில் இருந்த முந்திரிக் காடுகள் வழியே தப்பிச் சென்றுள்ளனர். போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →