முகப்பு
தற்போதைய செய்திகள்

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சேர்த்தி வைபவம்

காரைக்கால், ஜன. 27 : திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சேர்த்தி வைபவமாக ஸ்ரீ பெருமாள், அலமேலுமங்கைத் தாயார், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஒருசேர சிறப்பு அலங்காரத்தில் அருள்பா

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:59 PM
பகிர்:

காரைக்கால், ஜன. 27 : திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சேர்த்தி வைபவமாக ஸ்ரீ பெருமாள், அலமேலுமங்கைத் தாயார், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஒருசேர சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டித்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை பரிவேட்டை உத்சவம், மட்டையடி உத்சவம் ஆகியை பகலில் நடத்தப்பட்டது. இரவு சுவாமிகள் சேர்த்தி வைபவம் விமரிசையாக நடத்தப்பட்டது.

ஒரு ஆண்டின் மாசி மாதத்தில் கொடியேற்றத்துடன் பிரமோத்சவ விழா தொடங்கப்பட்டு, தொடர்ந்து கோயிலில் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடப்படுவது வழக்கம். அவ்வாண்டின் நிறைவில் தை மாதத்தில் கோயிலின் எல்லா சுவாமிகளையும் சேர்த்து பாசுரங்கள் பாடி நடத்தப்படுவது சேர்த்தி வைப்பவமாகிறது.

இந்த நிகழ்ச்சி இக்கோயிலில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் பட்டு வேட்டி துண்டு அணிந்தும், ஸ்ரீ அலமேலுமங்கைத்தாயார் பட்டு சேலையணிந்தும், பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகியவை பெருமாளுடன் சேர்ந்து தாயார் சன்னதியில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

புலவர் பக்ஷிராஜன் பரிவேட்டை குறித்தம், மட்டையடி உத்சவம் குறித்தும், சேர்த்தி வைபவம் குறித்தும், மேலு பெருமாளின் சிறப்புகளை விளக்கி சொற்பொழிவாற்றினார். ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் சுவாமிகளுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ ஆழ்வார்கள் அருட்பணி மன்றத்தின் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →