ஈரோட்டில் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்
ஈரோடு, ஜூலை 8: ஈரோடில் சிலிண்டர் வெடித்து வழக்குரைஞர் வீடு தரைமட்டமானது. ஈரோடு பாரிநகரில் வசிப்பவர் வழக்குரைஞர் ஈசுவரமூர்த்தி. இவர் நேற்று இரவு குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றிருந்தார். நள்ளிரவு
ஈரோடு, ஜூலை 8: ஈரோடில் சிலிண்டர் வெடித்து வழக்குரைஞர் வீடு தரைமட்டமானது.
ஈரோடு பாரிநகரில் வசிப்பவர் வழக்குரைஞர் ஈசுவரமூர்த்தி. இவர் நேற்று இரவு குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றிருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் இவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் இவரது வீடு தரைமட்டமானது. மேலும், அருகில் இருந்த இரு வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.