முகப்பு
தற்போதைய செய்திகள்

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை, ஜூலை 13 :  சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இக் கோயிலில் 58 வது ஆண்டாக பூச்சொரிதல் விழா கடந்த 6 ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. திரு

Updated On : 19 செப்டம்பர், 2012 at 10:50 PM
பகிர்:

சிவகங்கை, ஜூலை 13 :  சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

இக் கோயிலில் 58 வது ஆண்டாக பூச்சொரிதல் விழா கடந்த 6 ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் இரவு காளியம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய உற்சவமாக நடைபெற்ற பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு காலையில் காளியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி சந்தனக்காப்பு அலங்காரம் செய்து பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நேர்த்திக்கடன் செலுத்த காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் மாவிளக்கு பூஜை நடத்தியும் குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டி கோயிலை வலம் வந்தும் மொட்டை போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காளியம்மனை தரிசனம் செய்தனர். பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சிவகங்கை நகரில் பல இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.