முகப்பு
தற்போதைய செய்திகள்

கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமனம்

சென்னை, ஜூலை 17: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை (ஜூலை 19) நடைபெறவுள்ள குடிய

Updated On : 19 செப்டம்பர், 2012 at 10:57 PM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:39 PM
சென்னை, ஜூலை 17: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை (ஜூலை 19) நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், பாஜக, அதிமுக ஆதரவுடன் பி.ஏ. சங்மாவும் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் இருவரும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக ஏற்பாடுகளை கவனிப்பதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்களை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சாகர் ராய்கா குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தமிழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.