தனிப்பட்ட பிரச்னைக்காக திண்டுக்கல்லில் வழக்குரைஞர்கள் சாலைமறியல்
திண்டுக்கல், ஜூலை 21: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வழக்குரைஞர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவருக்கும் செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கணேசனுக்கும் இடை
திண்டுக்கல், ஜூலை 21: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வழக்குரைஞர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவருக்கும் செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கணேசனுக்கும் இடையில், இடப்பிரச்னை தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தில் மோதல் எழுந்தது. காவல் ஆய்வாளர் தன்னை மதிக்கவில்லை, அவமரியாதை செய்துவிட்டார் என்று கூறி ஒரு வழக்குரைஞர் புகார் செய்தார். இதை அடுத்து மற்ற வழக்குரைஞர்களும் சேர்ந்து கொண்டு, செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கணேசனைக் கண்டித்தும், அவரை இடம் மாற்றம் செய்யக் கோரியும் திண்டுக்கல் பேருந்து நிலைய சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.