வனக் காப்பாளரை அடித்த உதவி வன பாதுகாவலர்: நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி, ஜூலை 30: பொள்ளாச்சி அருகே ஆழியாறு சோதனைச் சாவடி மற்றும் வனப்பகுதியில் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் வனவிலங்குகள் வேட்டைத் தடுப்புக் காவலர்கள். அவர்கள் சனிக்கிழமை இரவு சோதனையில் ஈ
பொள்ளாச்சி, ஜூலை 30: பொள்ளாச்சி அருகே ஆழியாறு சோதனைச் சாவடி மற்றும் வனப்பகுதியில் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் வனவிலங்குகள் வேட்டைத் தடுப்புக் காவலர்கள்.
அவர்கள் சனிக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, உணவு உண்ண ஒரு இடத்தில் அமர்ந்தனர். அப்போது அங்கு வந்த உதவி வன பாதுகாவலர் அலுவலர் ராகுல் என்பவர், அவர்களை ஏன் நீங்கள் சோதனைக்குப் போகாமல் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள் என்று கூறி திட்டியுள்ளார். அப்போது, அவர் சந்திரன் என்ற வனக்காப்பாளரை அடித்து, அவரை ஒருமையிலும் மோசமாகத் திட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வனவிலங்குகள் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சங்கத்தினர், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் அலுவலகத்தினை முற்றுகை இட்டு போராட்டம் நடத்தினர். சம்பந்தப் பட்ட அதிகாரியை பணியிட மாற்றம் செய்ய வேண்டும், அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.