சென்னை, ஜூன் 6: சூரியனை வெள்ளி கிரகம் கடக்கும் அரிய நிகழ்வு இன்று காலை 10.22 மணி வரை காணலாம் என்பதால், காலை முதலே அங்கங்கே திரண்ட மாணவ மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் இதைக் கண்டு ரசித்துவருகின்றனர்.
வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என்பதால், பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட இடங்களில் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள கண்ணாடிகளை அணிந்து மாணவர்கள் பார்த்துவருகின்றனர்.
சென்னையில் புறநகரான தாம்பரம் பகுதியில் இந்த வானியல் அற்புதத்தைக் காண வசதியாக, பழைய தாம்பரம் குளம் அருகில் ஒருசாரார் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். தொலைநோக்கி மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் வழியாக அனைவரும் காணும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மீண்டும் இந்த நிகழ்வை காண 105 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதால், வாழ்நாளில் ஒரே முறை காணக்கூடிய இந்த அரிய நிகழ்வைக் காண ஏராளமானோர் ஆர்வமுடன் கூடியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.