கடலூர் நகராட்சிக் கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள்
கடலூர், ஜுன் 18 : கடலூர் நகராட்சிக் கூட்டத்தில், நகராட்சித் தலைவர் திமுகவைச் சேர்ந்த சுப்ரமணியத்தின் தன்னிச்சையான போக்கைக் கண்டித்து, துணைத் தலைவர் திமுகவைச் சேர்ந்த குமார் தலைமையில் பெரும்பாலான கவுன்
கடலூர், ஜுன் 18 : கடலூர் நகராட்சிக் கூட்டத்தில், நகராட்சித் தலைவர் திமுகவைச் சேர்ந்த சுப்ரமணியத்தின் தன்னிச்சையான போக்கைக் கண்டித்து, துணைத் தலைவர் திமுகவைச் சேர்ந்த குமார் தலைமையில் பெரும்பாலான கவுன்சிலர்கள் இன்று நடந்த நகராட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்து நகராட்சி வளாகத்திலேயே நின்றிருந்தனர்.
பொதுவாக நகராட்சித் தலைவர் குடிநீர் வசதி போன்ற பணிகளுக்காக ரூ. 5 லட்சம் வரை முன் அனுமதியின்றி செலவு செய்யலாம் என்றும், ஆனால் தலைவர் சுப்ரமணியம், ரூ.5 கோடியை சாலை அமைப்பது போன்ற பணிகளுக்காக கவுன்சிலர்களின் முன் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக செலவு செய்துள்ளார் என்றும், இந்த தன்னிச்சையான போக்கைக் கண்டித்து கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் கவுன்சிலர்கள் கூறினர்.
இந்த நிலையில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சுப்ரமணியம், மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையரின் அறிவுறுத்தல்படியே ரூ.5 கோடியை செலவிட்டதாகவும், இது குறித்து பேசி முடிவெடுக்கலாம் என்று கூறி நகராட்சி அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் பத்ரிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு கதவை மூடிவிட்டு கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.