தமிழகத்தில் கொட்டப்படும் கேரள கழிவுகள் : மதிமுக சார்பில் சாலை மறியல்
பொள்ளாச்சி, ஜூன் 19 : கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டும் கேரளாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக சார்பில் பொள்ளாச்சியை அடுத்து தமிழக எல்ல
பொள்ளாச்சி, ஜூன் 19 : கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டும் கேரளாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக சார்பில் பொள்ளாச்சியை அடுத்து தமிழக எல்லைப் பகுதியான கோபாலபுரத்தில் இன்று 250க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதிமுக சார்பில் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமையில், இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அரியலூரில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
கேரளாவில் கொல்லப்படும் கோழிகளின் கழிவுகளையும், மருத்துவக் கழிவுகளையும் லாரிகளில் ஏற்றி நள்ளிரவில் எல்லைப் பகுதியில் உள்ள தமிழக கிராமங்களின் விளை நிலங்களில் கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இந்த அத்துமீறல் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது இந்த நிலை அதிகரித்து வருகிறது. இதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்று மதிமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.