ஈரோடு அருகே லாரி-கார் மோதல்: 3 பேர் பலி
ஈரோடு, ஜூன் 29: ஈரோடு அருகே சித்தோடு என்னும் இடத்தில் ஒரு காருடன் லாரி மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். வெள்ளிக்கிழமை இரவு 8.45 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள
ஈரோடு, ஜூன் 29: ஈரோடு அருகே சித்தோடு என்னும் இடத்தில் ஒரு காருடன் லாரி மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். வெள்ளிக்கிழமை இரவு 8.45 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காரில் 6 பேர் பயணம் செய்தார்கள். அவர்களில், திருப்பூர் பல்லடத்தைச் சேர்ந்த கோகுல் பிரபு (28), சோமனூர் அருகே கோம்பக்காடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (27) மற்றும் பெயர் தெரியவராத ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். காரில் பின்புற இருக்கையில் பயணம் செய்த ஷாலினி (25), பானுப்ரியா (26), சரண்யா (25) மூவரும் பலத்த காயமடைந்தனர். இம்மூவரும் ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் ஆறு பேரும் கோவையில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணி செய்கிறார்கள். சேலத்தில் ஒரு தனியார் நிறுவன நேர்காணல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு கோவைக்குத் திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கோவையிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற லாரி ஈரோடு அருகே உள்ள சித்தோடு - பேரோடு பகுதியில் நான்கு வழிச்சாலையில் வந்த போது, லாரியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.