பெரம்பலூரில் நீச்சல் பழகச் சென்ற மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி சாவு
பெரம்பலூர், மே 29: பெரம்பலூர் அருகே, நீச்சல் பழகச் சென்ற மாணவி உள்பட 3 பேர் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ரஞ
பெரம்பலூர், மே 29: பெரம்பலூர் அருகே, நீச்சல் பழகச் சென்ற மாணவி உள்பட 3 பேர் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ரஞ்சித்குமார் (16). இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நல்லுசாமி மகள் பாரதி (15). அம்மாபாளையத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துள்ளார்.
தற்போது, கோடை விடுமுறை என்பதால் ரஞ்சித்குமார், பாரதி மற்றும் அவரது நண்பர்கள் நீச்சல் கற்றுக் கொள்ள அந்தப் பகுதியில் உள்ள வயல்காட்டு கிணற்றில் செவ்வாய் இன்று காலையில் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தனர். அப்போது ரஞ்சித் குமார், பாரதி ஆகியோர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், கிணற்றில் குதித்து இறந்தவர்களின் உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள நாவக்குறிச்சியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் எஜமான் (14) மற்றும் அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் அருகேயுள்ள புதுநடுவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூரில் உள்ள உறவினரான நடராஜ் வீட்டுக்கு வந்தனராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இன்று அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டை நீரில் நீச்சல் கற்றுக் கொள்ளச் சென்ற எஜமான், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த, பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவங்கள் குறித்து, பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.