திண்டுக்கல்லில் ரயில் மறியல்: 100க்கும் மேற்பட்டோர் கைது
திண்டுக்கல், மே 31: பெட்ரோல் விலைஉயர்வைக் கண்டித்து பாரத் பந்த் நடத்தி வரும் எதிர்க்கட்சிகள், ஆங்காங்கே ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில்
திண்டுக்கல், மே 31: பெட்ரோல் விலைஉயர்வைக் கண்டித்து பாரத் பந்த் நடத்தி வரும் எதிர்க்கட்சிகள், ஆங்காங்கே ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கட்சியின் மாதர் சம்மேளனம் உள்பட சில அமைப்பினர் குருவாயூர் - திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் ரயில் 30 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது.