பள்ளியை விட்டு நீக்கிய குழந்தைகளை சேர்க்க உத்தரவு
மதுரை, மே 31 : விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வசூலித்த கூடுதல் கட்டணத்தைச் செலுத்தாததால் பள்ளியை விட்டு நீக்கிய 24 குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுர
மதுரை, மே 31 : விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வசூலித்த கூடுதல் கட்டணத்தைச் செலுத்தாததால் பள்ளியை விட்டு நீக்கிய 24 குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீவி லயன்ஸ் ஸ்கூல் நிர்வாகம் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாகவும், கட்டணத்தை செலுத்தாத பெற்றோர் சங்க உறுப்பினரது பிள்ளைகளை பள்ளியில் இருந்து நீக்கியதாகவும், பெற்றோர் சங்க தலைவர் கண்ணன் மனு தாக்கல் செயதிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி வி.எம். அக்பர் அலி, பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட 24 குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும், பெற்றோர் சங்க உறுப்பினர்களின் அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிட்டு விசாரணையை ஜுன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.