மேலூரில் டெங்கு காய்ச்சலுக்கு இன்று 3 பேர் பலி
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி லதா (30) மற்றும் புளிமலைப்பட்டியைச் சேர்ந்த
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி லதா (30) மற்றும் புளிமலைப்பட்டியைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவரின் 8 மாதக் குழந்தை சேதுராஜன் இருவரும் டெங்கு காய்ச்சல் கண்டு, மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்று உயிரிழந்தனர்
மேலூர் 1வது வார்டு பழைய சுக்காம்பட்டியைச் சேர்ந்த கருப்பன் என்பவரின் மனைவி வள்ளி (60) டெங்கு காய்ச்சலால் மேலூரில் மருத்துவமனையில் மருந்து வாங்கி உண்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டில் இறந்து கிடந்தார்.
இதை அடுத்து டெங்கு காய்ச்சலுக்கு மேலூர் பகுதியில் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.