குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்: ஒடிசா அச்சக ஊழியர் கைது
குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ஒடிசா சேர்ந்த அச்சக ஊழியர் ஒருவரை சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ஒடிசா சேர்ந்த அச்சக ஊழியர் ஒருவரை சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் ஆக.11-ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வு நடைபெற்றது. ஈரோட்டில் உள்ள ஓர் மையத்தில் கேள்வித்தாளின் நகலை கையில் வைத்திருந்ததாக பவானியை சேர்ந்த தனக்கொடி, அவரது கணவர் செந்தில், கல்லூரி பேராசிரியர்கள் உள்பட இதுவரை 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த தியாகராஜன், செந்தில்குமார், ஸ்ரீதர்ராஜ் (எ) பாலன் ஆகியோர் மூலம்தான் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கேள்வித்தாள் வெளியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் ஒடிசா புவனேஸ்வரில் ரயில்வே துறையில் பணியாற்றிய ஆனந்தராவ் கைது செய்யப்பட்டப்பின் இவ்வழக்கில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இத்தொடர்ந்து இவ்வழக்கு ஈரோடு நகர காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த சிவில் வழக்குரைஞர் ககூன் சேனாதி பிகாரி (49) என்பவரை சிபிசிஐடி போலீஸார் நவ.1-ம் தேதி கைது செய்தனர்.
ஒடிசாவில் உள்ள ஒரு அச்சகத்தில் பணியாற்றி வந்த புவனேஸ்வரை சேர்ந்த கோத்ரா மோகன் மந்த்ராவிடம் இருந்து ககூன் கேள்வித்தாளை பெற்றதும், தனது நண்பரான ஆனந்தராவ் மூலம் தமிழகத்தில் கேள்வித்தாளை பல லட்சத்துக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பதுங்கி இருந்த கோத்ரா மோகன் மந்த்ராவை ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.