முகப்பு
தற்போதைய செய்திகள்

5 பஸ்கள் மீது கல்வீச்சு: ராமநாதபுரத்தில் இருந்து போக்குவரத்து மீண்டும் நிறுத்தம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்குச் சென்று திரும்பியவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் காயமடைந்த 3 பேர் நேற்றும் இன்றும் உயிரிழந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று காலை 5 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்குச் சென்று திரும்பியவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் காயமடைந்த 3 பேர் நேற்றும் இன்றும் உயிரிழந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று காலை 5 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

திருப்புவனம் அருகே 2 பஸ்கள் மீதும், சிவகங்கை அருகே மலம்பட்டியில் 3 பஸ்கள் மீதும் வன்முறை கும்பல் கல் வீசித் தாக்கியதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.

இதனால் ராமநாதபுரம் - மதுரை வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஏற்கெனவே வன்முறைச் சம்பவங்களால் கடந்த 31ம் தேதி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம் தொடங்கிய பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது. இதனால், ராமநாதபுரம் மதுரை இடையே போக்குவரத்து இல்லாமல், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். அனைவரும் ரயில்களையே நாடிச் சென்றதால், ரயிலில் கூட்டம் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.