தருமபுரி அருகே காதல் கல்யாணத்தால் தகராறு: குடிசைகளுக்கு தீவைப்பு
தருமபுரி அருகே நாயக்கன்கொட்டாய் என்ற இடத்தில் காதல் திருமணம் ஒன்று ஊரையே இரண்டாக்கியிருக்கிறது.
தருமபுரி அருகே நாயக்கன்கொட்டாய் என்ற இடத்தில் காதல் திருமணம் ஒன்று ஊரையே இரண்டாக்கியிருக்கிறது. ஒரு தரப்பு மறு தரப்பைச் சேர்ந்த குடிசைகளுக்கு தீ வைத்து எரித்துள்ளது. இதனால், குடிசைகள் கொளுந்து விட்டு எரிகின்றன. ஊருக்குள் தீயணைப்புத்துறையோ போலீஸாரோ, வருவாய்த்துறையினரோ பத்திரிகையாளர்களோ செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.