தேவர் ஜெயந்தியில் மோதல் : ரித்திஷுக்கு முன் ஜாமீன்
தேவர் ஜெயந்தியில் அருப்புக்கோட்டையில் நடந்த மோதல் தொடர்பான வழக்கில் ரித்திஷுக்கு மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியது.
தேவர் ஜெயந்தியில் அருப்புக்கோட்டையில் நடந்த மோதல் தொடர்பான வழக்கில் ரித்திஷுக்கு மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியது.
அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் கிராமத்தில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவுக்கு திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வந்திருந்தார். அவரை வரவேற்க வந்திருந்த திமுகவின் ரித்திஷ் தரப்பினருக்கும், சுபாஷ் தங்கவேலன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இகு குறித்து மதுரை தல்லாக்குளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு பசும்பொன்னில் இருந்து அருப்புக்கோட்டை அழைத்துச் சென்ற போது திமுகவினருக்கு இடையே அடிதடி மோதல், வாகனங்கள் மீது தாக்குதல் சம்பவமும் நடந்தது.
இது தொடர்பாக ரித்திஷ் எம்பி உள்ளிட்ட முன்னாள் எம்எல்ஏ முருகவேல் உள்ளிட்ட 13 பேர் மீது அருப்புக்கோட்டை போலிஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில், ரித்திஷ் உள்ளிட்ட 13 பேரும் முன் ஜாமீன் வழங்கக் கோரி மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம், ரித்திஷ் எம்.பி. போலிஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், மற்றவர்கள் தினசரி அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினர்.
மதுரை தல்லாக்குளம் வழக்கு விசாரணையில் போலிஸார் ரித்திஷ் உள்ளிட்டோரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.