வயலுக்கு நீர் இல்லை: வருத்தத்தில் விவசாயி தற்கொலை
நாகப்பட்டினம் மாவட்டம் வலிவலம் அருகே வயலுக்குப் பாய்ச்ச நீர் இல்லாததைக் கண்ட விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வலிவலம் அருகே வயலுக்குப் பாய்ச்ச நீர் இல்லாததைக் கண்ட விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
வலிவலத்தைச் சேர்ந்த விவசாயி ராஜாங்கம் நேற்று மாலை கூத்தங்குடியில் உள்ள தனது வயலுக்குச் சென்றுள்ளார். தண்ணீர் பாய்ச்ச வழியில்லாமல் பயிர்கள் கருகுவதைக் கண்டு மனம் உடைந்து, பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக திருவாரூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.