முகப்பு
தற்போதைய செய்திகள்

நாஞ்சில் சம்பத் திமுகவில் இணைகிறாரா?

மதிமுகவில் கொள்கை பரப்புச் செயலராக இருந்து மேடைப்பேச்சுகளில் தீப்பொறி பறக்க கடும் விமர்சனங்களை முன்வைத்தவர் நாஞ்சில் சம்பத். அவருடைய வலுவான பேச்சுக்காகவே ஒரு  தரப்பு மதிமுக பொதுக்கூட்டங்களுக்கு வருவதுண்டு.

Updated On : 27 நவம்பர், 2012 at 1:08 PM
பகிர்:

மதிமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத் திமுகவில் இணையவுள்ளதாக செய்தி வெளியானது.

மதிமுகவில் கொள்கை பரப்புச் செயலராக இருந்து மேடைப்பேச்சுகளில் தீப்பொறி பறக்க கடும் விமர்சனங்களை முன்வைத்தவர் நாஞ்சில் சம்பத். அவருடைய வலுவான பேச்சுக்காகவே ஒரு  தரப்பு மதிமுக பொதுக்கூட்டங்களுக்கு வருவதுண்டு.

அண்மைக் காலமாக மதிமுக பொதுச் செயலர் வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கட்சியில் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தார் நாஞ்சில் சம்பத். அவரை எந்தப் பொதுக்கூட்டங்களிலும் பேச அழைக்க வேண்டாம் என்று தன் கட்சிக் காரர்களுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருந்தார் வைகோ என்று கூறப்பட்டது. இந்நிலையில், நாஞ்சில் சம்பத் திமுகவில் இணையக் கூடும் என்று செய்திகள் உலா வந்தன. அவரை தி.மு.க,.வில் இணையவைக்க முயற்சி நடந்த வேளையில், அவர் தனது சொந்த ஊரில் நடந்து சென்ற போது, கீழே விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அடுத்த வாரம் தி.மு.க.வில் இணையக் கூடும் என்று கூறப்பட்டது.

Advertisement

இந்நிலையில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் யார் வீட்டுக் கதவையும் தட்டவுமில்லை, நான் எங்கும் செல்லவுமில்லை என்று கூறினார். தற்போதும் வீட்டில்தான் இருப்பதாக அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.