மதுரை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: மேலும் ஒருவர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் புறவழிச் சாலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்குச் சென்று திரும்பியவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், இதுவரை 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் புறவழிச் சாலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்குச் சென்று திரும்பியவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், இதுவரை 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சிவராமன் (19) என்பவர், இன்று மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அடுத்து, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.