கடலூர் நகரமன்றக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்
கடலூர் நகரமன்றக் கூட்டத்தில் இன்று பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.
கடலூர் நகரமன்றக் கூட்டத்தில் இன்று பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.
கடலூர் நகரமன்றக் கூட்டம் இன்று காலை துவங்கியதும், 44 கவுன்சிலர்களும், தங்களது வார்டுகளில் உள்ள பிரச்னைகளை எடுத்துக் கூறி அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.
பிறகு, மாசு கலந்து வரும் குடிநீரை உடனடியாக சரி செய்து சுத்தமான குடிநீரை வழங்கவும், கொசுக்களை ஒழிக்க கொசு மருந்து தெளிக்கவும், பன்றிகளால் மூளைக் காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால், சாலைகளில் சுற்றித் திரியும் பன்றிகளைக் கட்டுப்படுத்தவும், நாய்களைப் பிடித்து குடும்பக் கட்டுப்பாடு செய்யவும், கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆக்ரமிப்புகளை பாரபட்சம் இன்றி அகற்ற வேண்டும், 45 வார்டுகளிளை அடிப்படை வசதிகளை பாரபட்சம் இன்றி நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய நகர மன்றத் துணைத் தலைவர் குமார் (அதிமுக), மழைக் காலம் வரவிருப்பதால், இருக்கும் கால்வாய்களை சீரமைக்கவும், மாதந்தோறும் நகரமன்றக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு நடைபெறாவிட்டால், மரத்தடியில் கூட்டம் நடைபெறும் என்றும், நகர மன்றத் தலைவர் சுப்ரம்ணியனின் (அதிமுக) மகன் மற்றும் உறவினர்கள் நகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் பேசினார்.
இதனை ஏற்றுக் கொண்ட தலைவர் சுப்ரமணியன், இதுவரை தனது குடும்பத்தார் நகராட்சி நிர்வாகத்தில் தலையிட்டது இல்லை என்றும், இனிமேலும் அவர்களது தலையீடு இருக்காது என்றும் உறுதி அளித்தார். இதனால் சிறிது நேரம் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.