குராஜன் வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை: விவசாயிகள் வேதனை
கீழணையிலிருந்து கடலூர் மாவட்ட வேளாண் பாசனத்திற்கு கடந்த செப்.30-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் வேளாண் பாதனத்திற்கு காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வடக்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் வராததால் .
கீழணையிலிருந்து கடலூர் மாவட்ட வேளாண் பாசனத்திற்கு கடந்த செப்.30-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் வேளாண் பாதனத்திற்கு காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வடக்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் வராததால் 30ஆயிரம் ஏக்கர் நிலங்களில் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ராஜன் வாய்க்காலில் படித்துறை கட்டுவதற்காக அந்த வாய்க்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை திறந்து விடவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். பொதுப்பணித்துறையினர் வாய்க்கால் மற்றும் ஆறுகளில் மராமத்து பணிகளை மே மாதமே முடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் சட்டப்பேரவையிலேயே அறிவித்துள்ளார். ஆனால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் சமீபத்தில்தான் மராமத்து பணிகளை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தமிழக உழவர் முன்னணி மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.சரவணன் தெரிவித்தது: வடக்கு ராஜன் வாய்க்கால் மூலம் 29,835 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த ஆண்டு எங்களுக்கு மிகவும் காலதாமதாமக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தண்ணீர் திறந்து 5 நாட்களாகியும் இன்று வரை ராஜன் வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் வீராணம்ஏரியில் 42 அடி நீர் தேக்கியவுடன் தண்ணீர் வழங்குவதாக தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் வீராணம்ஏரியில் நீரை தேக்கி சென்னைக்கு குடிநீர் அனுப்பவதிலேயே கவனம் செலுத்துகின்றரே தவிர, வேளாண் பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவது பற்றி கவலைப்படவில்லை. காலதாமதமாக தண்ணீர் வழங்கினால் எந்த பணியும் செய்ய முடியாது. எனவே ராஜன் வாய்க்காலில் அதிகாரிகள் உடனடியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்கிறார் ஆர்.சரவணன்.