சுதி ஈமு பார்ம் நிர்வாக இயக்குனர் உள்பட இருவர் கைது
ஈமு கோழி பண்ணை மோசடி தொடர்பாக, ரூ. 10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக பொதுமக்களிடம் இருந்து வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஈரோடு பகுதி சுதி ஈமு ஃபார்ம் நிர்வாக இயக்குனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈமு கோழி பண்ணை மோசடி தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஈரோடு பகுதி சுதி ஈமு ஃபார்ம் நிர்வாக இயக்குனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை எம்.ஜி.ஆர்.சிலை அருகே வைத்து அவர்களைக் கைது செய்தனர்.
சென்னிமலையைச் சேர்ந்த கே.எஸ்.தமிழ்நேசன் (28) என்பவர் இதன் நிர்வாக இயக்குநர். இந்நிறுவனத்தின் பங்குதாரர் வாசு (42) இவர் ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்
இந்நிறுவனத்தில் 171 பேர் முதலீடு செய்துள்ளனர். அவர்களில் 42 பேருக்கு முழுப் பணத்தையும் கொடுத்துள்ளனர். மீதம் உள்ள முதலீட்டாளர்களுக்கு ரூ.2கோடியே12 லட்சம் பணம் தரவேண்டியுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்துக்குரிய நாலரை ஏக்கர் நிலம், 2 கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், முக்கிய எதிரியாகக் கருதப்படும் சேலம் சங்ககிரி அக்கம்மாபேட்டையைச் சேர்ந்த யுவராஜ் என்பவரைத் தேடிவருகின்றனர். இவர்தான் பணம் வசூல் செய்து கொடுத்தவர்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 20 ஈமு கோழி நிறுவனங்கள் மீது புகார் வந்துள்ளது. இது தொடர்பாக 4000 பேருக்கு மேல் புகார் கொடுத்துள்ளனர். ரூ.250 கோடிக்கு மேல் மோசடிப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.