முகப்பு
தற்போதைய செய்திகள்

திரையரங்கு அருகே இளைஞர் மர்மச் சாவு

கல்லிடைக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நேற்று திரையரங்கு அருகே மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:08 PM
பகிர்:

கல்லிடைக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நேற்று திரையரங்கு அருகே மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார்.

கல்லிடைக்குறிச்சி வைராவிகுளம் செல்லும் சாலையில் திரையரங்கு உள்ளது. திரையரங்கு அருகில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 38 வயது மதிக்கத்தக்க இளைஞர் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி போலீஸார் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

காவி நிற வேஷ்டியும், வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார். அவரது சட்டப்பையில் வெற்றிவேல் என பெயர் எழுதப்பட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சீட்டு இருந்தது. அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் அப்துல்ரகுமான் புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →