சத்துணவு பணியாளர் நியமன ரத்துக்கு டிவிஷன் பெஞ்ச் தடை
சத்துணவு பணியாளர் நியமனம் செல்லாது என்று மதுரைக் கிளை நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த உத்தரவுக்கு டிவிஷன் பெஞ்ச் தடை விதித்துள்ளது.
சத்துணவு பணியாளர் நியமனம் செல்லாது என்று மதுரைக் கிளை நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த உத்தரவுக்கு டிவிஷன் பெஞ்ச் தடை விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் அரசு ஆணைகள் சரிவர பின்பற்றப்படவில்லை, அரசு ஆணைகள் முன்னுக்குப் பின் முரணாக பின்பற்றப்பட்டுள்ளது.
ஏற்கனேவ 20,000 பணியாளர்களின் நியமனத்தை ரத்து செய்து தனி நீதிபதி கடந்த 1ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத்தின் துணைச் செயலர் சந்திரமணி மேல்முறையீட்டு மனுவை டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் டிபிஎஸ் ஜனார்த்தன ராஜா, எம். துரைசாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் மனு மீதான விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.