முகப்பு
தற்போதைய செய்திகள்

துரை தயாநிதிக்கு பிடிவாரண்ட் கோரும் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைப்பு

கிரானைட் முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கக் கோரும் மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

கிரானைட் முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கக் கோரும் மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மதுரை தனிப்படை போலீஸார் மேலூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் துரை தயாநிதிக்கு பிடியாணை பிறப்பிக்கக் கோரும் மனுவை இரு தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், துரை தயாநிதி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், தன் மீதான வழக்குகளைக் கைவிட கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்த விசாரணை குறித்த விவரத்தை மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திமுகவினர், போலீஸார் மனு செய்திருந்த பிடியாணை உத்தரவுக்கு தடை கோரினர்.

இதனை விசாரித்த மேலூர் மேஜிஸ்திரேட் நீதிபதி ஜெய்குமார், இந்தப் பிடியாணை மனு மீதான விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →