கர்நாடக அரசை கலைக்க கோரி சிதம்பரத்தில் மூப்பனார் பேரவையினர் சாலைமறியல்
356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசினை குடியரசுத்தலைவர் கலைக்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் மேலவீதியில் மூப்பனார் பேரவையினர் சாலைமறியலில்
356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசினை குடியரசுத்தலைவர் கலைக்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் மேலவீதியில் மூப்பனார் பேரவையினர் சாலைமறியலில் ஈடுபட்டு காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
போராட்டத்திற்க்கு மூப்பனார் பேரவைத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமை வகித்தார். பேரவை நிறுவனரும், பொதுச்செயலாளருமான ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட மூப்பனார் பேரவைத் தலைவர் எஸ்.கே.வைத்தி, ஜி.கே.வாசன் பேரவைத் தலைவர் கோ.குமார், மாவட்ட காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாபு ஆர்.எஸ்.சந்திரசேகரன், நிர்வாகிகள் ஆர்.வி.சின்ராஜ், கட்டாரி சந்திரசேகர், ஜி.குமார், ஆர்.ரமேஷ், ஆட்டோ குமார், மகளிரனி கே.ராஜலட்சுமி, பூமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.