முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் வட்டத்தில் 95 ஊராட்சிகளில் திமுகவினர் உண்ணாவிரதம்

பால்விலை, மின்கட்டணம், பஸ் கட்டணம் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், மின்வெட்டை கண்டித்தும், அதிமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் சிதம்பரம் வட்டத்தில் 95 ஊராட்சிகளில் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

பால்விலை, மின்கட்டணம், பஸ் கட்டணம் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், மின்வெட்டை கண்டித்தும், அதிமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் சிதம்பரம் வட்டத்தில் 95 ஊராட்சிகளில் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

சிதம்பரம் நகரத்தில் ஒரு ஊராட்சியிலும், தாலுக்கா பகுதியில் 18 ஊராட்சிகளிலும், அண்ணாமலைநகர் பகுதியில் 15 ஊராட்சிகளிலும், கிள்ளை பகுதியில் 12 ஊராட்சிகளிலும், புவனகிரி பகுதியில் 13 ஊராட்சிகளிலும், மருதூர் பகுதியில் 10 ஊராட்சிகளிலும், புதுச்சத்திரம் பகுதியில் 16 ஊராட்சிகளிலும், பரங்கிப்பேட்டை பகுதியில் 10 ஊராட்சிகளிலும் திமுகவினர் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.