முகப்பு
தற்போதைய செய்திகள்

மர்மக் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனை பணியாளர் பலி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பள்ளர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 36). இவர் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:20 PM
பகிர்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பள்ளர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 36). இவர் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் செவிலியராகப் பணி செய்து வருகிறார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தனக்கு விடுப்பு வேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால், மேலூர் பகுதியில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால், மருத்துவமனை நிர்வாகம் விடுப்பு தரவில்லையாம். இதனை அடுத்து இரு தினங்களுக்கு முன்னர் இவர் மனைவி மற்றும் குடும்பத்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததில் பேரில், இவர் விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். கணவருக்கு முன்னமேயே விடுப்பு அளித்து சிகிச்சை கொடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர் உயிரிழந்திருக்க மாட்டார் என அவரது மனைவி புகார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.