முகப்பு
தற்போதைய செய்திகள்

கோயம்பேட்டில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: இளைஞர் கைது

சென்னை கோயம்பேட்டில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Updated On : 27 அக்டோபர், 2012 at 9:21 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:52 AM

சென்னை கோயம்பேட்டில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் அருகே பேங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தின் காவலாளியாக ராமசாமி உள்ளார். இவர் அருகே உள்ள ஒரு தனியார் வங்கியின் காவலாளியாகவும் உள்ளார்.

Advertisement

வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் ராமசாமி, அந்த தனியார் வங்கிக்கு சென்றுவிட்டு ஏ.டி.எம் மையத்துக்கு திரும்பி வந்தார். அப்போது அங்கு ஏ.டி.எம். இயந்திரத்தை இருவர் கடப்பாரை கம்பியால் உடைக்க முயற்சி செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று விசாரணை செய்தனர். அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் இயந்திரத்தை உடைத்தவர்களின் படம் பதிவாகியிருந்ததால், அந்த கேமராவையும் போலீஸôர் எடுத்துச் சென்றனர்.

கைரேகை, கேமராவில் சிக்கிய மர்ம நபர்களின் படம் ஆகியவற்றின் மூலம் மர்ம நபர்களைப் பற்றி போலீஸôர் விசாரணை செய்தனர். விசாரணையில் ஒருவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அகரம் பெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸôர் அவரை சனிக்கிழமை கைது செய்து, விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் மதுபோதையில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்ததாக தெரிவித்தாராம். மேலும் இந்த வழக்குத் தொடர்பாக ஒருவரை போலீஸôர் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.