தற்போதைய செய்திகள்

மின்வெட்டை நீங்களே அனுமதிக்கிறீர்கள்: விஜயகாந்த் எரிச்சல் பதில்

மின்வெட்டை நீங்களே அனுமதிக்கிறீர்கள் என்று விஜயகாந்த் எரிச்சலுடன் பதில் அளித்தார்.

ஜெயப்பாண்டி

மின்வெட்டை நீங்களே அனுமதிக்கிறீர்கள் என்று விஜயகாந்த் எரிச்சலுடன் பதில் அளித்தார்.

இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகள் கேட்க முனைந்தனர். நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் தேமுதிகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரை சந்தித்தது குறித்து கேட்க முனைந்தனர். அப்போது அவர், ஏனய்யா நாட்டிலே மின்வெட்டு இருக்கிறது, டெங்கு இருக்கிறது அதையெல்லாம் கேளுங்கள்... அதைவிட்டு இது ரொம்ப முக்கியமா என்று கோபாவேச வசனம் பேசினார். அதனால், அவர் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புணர்ந்து மின்வெட்டு பற்றி கேள்வி கேட்டால் ஒரு கருத்து தெரிவிப்பாரோ என்ற எதிர்பார்ப்பில் இன்று காலை மதுரையில் செய்தியாளர்கள் அவரிடம் மின்வெட்டு பற்றி கருத்து கேட்டனர். அதற்கு அவர், "ஆமாம் மின்வெட்டை நீங்களே அனுமதிக்கிறீர்கள்... பிறகு என்னிடம் வந்து ஏன் கேட்கிறீர்கள்” என்று எரிச்சலில் பதில் அளித்துவிட்டு, தனது எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை மீண்டும் ஒரு முறை நிரூபித்துச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT