முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுவை மாநில திமுக செயற்குழுக் கூட்டத்தில் அடிதடி ரகளை

புதுவை மாநில திமுக செயற்குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடி ரகளையில் மூவருக்கு காயம் ஏற்பட்டது.

Updated On : 29 அக்டோபர், 2012 at 12:35 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:53 AM

புதுவை மாநில திமுக செயற்குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடி ரகளையில் மூவருக்கு காயம் ஏற்பட்டது.

புதுவை மாநிலத்தில் இன்று காலை திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற திமுக மாநில செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏவும், மாநில அமைப்பாளருமான எம்.ஏ. சுப்ரமணியம் தலைமை தாங்கினார்.

முன்னதாக நடைபெற்ற மாநில தலைவர் போட்டியில் எம்.ஏ.சுப்ரமணியனும், இளைஞர் அணி அமைப்பாளர் சிவாவும் போட்டியினர். சென்னை அறிவாலத்தில் நடைபெற்ற தேர்தலில் எம்.ஏ. சுப்ரமணியம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பே இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது.

Advertisement

இந்நிலையில் இன்று செயற்குழுக் கூட்டம் துவங்கியதும். முதலியார்பேட்டையில் தனக்கு சொந்தமான கலைஞர் இல்லத்தை திமுக கட்சிக்கு எழுதி வைப்பதாக எம்.ஏ. சுப்ரமணியம் அறிவித்தார். அப்போது இளைஞர் அணியினர் இல்லத்தை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு கூட்டத்தை நடத்துங்கள் என்று கூச்சலிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதில், சுப்ரம்ணியத்துக்கு ஆதரவான ஏம்பலம் தொகுதி செயலாளர் செல்வம் உட்பட கட்சி நிர்வாகிகள் 3 பேர் தாக்கப்பட்டனர். திமுக அலுவலக நாற்காலிகள் உடைக்கப்பட்டன. இதனால், திமுக மாநில செயற்குழுக் கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.