பண்ருட்டி அருகே ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்: போலீஸ் பாதுகாப்பு
ஆக்கிரமிப்பு அகற்றம் பண்ருட்டி, செப்.1: பண்ருட்டி அருகே ஒரையூர் பகுதியில் 100 ஏக்கர் பரப்புள்ள ஏரியாக இருந்தது இன்று 80 சதவீத ஆக்கிரமிப்பு காரணமாக 20 ஏக்கர் பரப்புக்கு மாறியுள்ளது. இந்த ஏரியால் பாசன வ
ஆக்கிரமிப்பு அகற்றம்
பண்ருட்டி, செப்.1: பண்ருட்டி அருகே ஒரையூர் பகுதியில் 100 ஏக்கர் பரப்புள்ள ஏரியாக இருந்தது இன்று 80 சதவீத ஆக்கிரமிப்பு காரணமாக 20 ஏக்கர் பரப்புக்கு மாறியுள்ளது. இந்த ஏரியால் பாசன வசதி பெற்ற நிலங்கள் இப்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இதனால் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஏரி ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அறிவித்திருந்தது.
ஏரியை ஆக்கிரமித்து 5 ஏக்கர் நிலத்தில் கொய்யா, 15 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிடப்பட்டிருந்தது. பெரும்பாலான பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் அறுவடையாகி முடிந்துவிட்டது.
இந்நிலையில், 7 வாகனங்களில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்தப் பயிர்களை எடுத்து அகற்றி, ஏரியை தூய்மைப் படுத்தி வருகின்றனர். பிரச்னை ஏற்படாமல் தடுக்க 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.