கடலூரில் நகை வியாபாரியிடம் இருந்து 1.2 கிலோ தங்கம் கொள்ளை
கடலூர், செப்., 04 : கடலூரில் தங்க நகை வியாபாரி வெங்கடேஷிடம் இருந்து 1.2 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் (35), தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று இரவு ஒன
கடலூர், செப்., 04 : கடலூரில் தங்க நகை வியாபாரி வெங்கடேஷிடம் இருந்து 1.2 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் (35), தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று இரவு ஒன்றரைக் கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு கடலூர் சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் தங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த நபர், கத்தியைக் காட்டி மிரட்டி வெங்கடேஷிடம் இருந்து தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்.
இது குறித்து திருப்பாப்புலியூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து ஏடிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.