முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தை மணல் லாரி உரிமையாளர்கள் முற்றுகை

பண்ருட்டி, செப்.4: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். சுமார் 300க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னே கூடினர

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:46 PM
பகிர்:

பண்ருட்டி, செப்.4: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

சுமார் 300க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னே கூடினர். அங்கே, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் செயற்குழுக் கூட்டம் நடத்தினர். அப்போது, தங்கள் லாரி டிரைவர்கள், கிளீனர்களைக் கைது செய்துள்ள போக்கைக் கண்டித்தும், அவர்களை இன்று மாலைக்குள் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இல்லை எனில் மாநில அளவில் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைந்து அறிவிக்க நடவடிக்கை எடுப்போம் என்றனர்.

இதை அடுத்து, தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரிகிறது.

சில நாட்கள் முன்பு தமிழக அரசு மணல் ஏற்றிச் செல்வதை தடை செய்தது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த லாரிகள், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வர புதுவை வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மாநில எல்லைப் பகுதியில் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டது. லாரி ஓட்டுநர், கிளீனரை கைது செய்து, ஜாமீனில் வெளிவர இயலாத நிலையில் வைக்கப்பட்டது.

இதனால்,  பண்ருட்டி கண்டரக்கோட்டையில் இயங்கிவரும் 2ம் நிலை மணல் விற்பனையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் லாரி உரிமையாளர்கள்.

அந்த மணல் குவாரி உரிமையாளர், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதை அடுத்தே விழுப்புரம் கடலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் கூடி செயற்குழுக் கூட்டம் நடத்தியுள்ளனர்.

இன்று மாலைக்குள் ஓட்டுனர், கிளீனர்களை விடுவிக்காவிட்டால், 2ம் நிலை மணல் விற்பனையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் மாநிலம் தழுவிய அளவில் ஒருங்கிணைத்து போராட்டம் அறிவிப்போம் என்றும் கூறினர்.

முழு கட்டுரையைப் படிக்க →