முகப்பு
தற்போதைய செய்திகள்

பண்ருட்டி ஊராட்சி மன்றக் கூட்டத்தில் வாக்குவாதம்: கண்டித்து தர்ணா

பண்ருட்டி, செப்.5: பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தில் ஊராட்சிக் குழுத் தலைவரின் அராஜகப் போக்கைக் கண்டித்து துணைத் தலைவர் சிவசங்கரி தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலக வாயிலில் அமர்ந்து பத்து உறுப்பினர்க

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:46 PM
பகிர்:

பண்ருட்டி, செப்.5: பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தில் ஊராட்சிக் குழுத் தலைவரின் அராஜகப் போக்கைக் கண்டித்து துணைத் தலைவர் சிவசங்கரி தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலக வாயிலில் அமர்ந்து பத்து உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

அதிமுக., பாமக., வைச் சேந்த தலா 4  உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள் 2 பேர் என 10 உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக ஊராட்சி மன்றக் கூட்டத்தில் சீதாபதி என்ற அதிமுக கவுன்சிலர், முதலில் நாங்கள் கேள்வி கேட்கிறோம். தீர்மானத்தை பிறகு படியுங்கள் என்றார். ஆனால் தலைவர் அதற்கு மறுதலையாகச் சொன்னார். அதைத் தொடர்ந்து வாக்குவாதம் நடந்தது. பின்னர் தீர்மானம் படிக்கப்பட்டது. உறுப்பினர்கள் கேள்வி கேட்டார்கள்.

அப்போது எழுந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் வெளியேறினர். பின்னர் தர்ணாவிலும் இறங்கினர்.

முழு கட்டுரையைப் படிக்க →