இன்றும் ஆளில்லாத விமானம் மூலம் கிரானைட் கற்களை அளவிடும் பணி
மேலூர், செப்., 08 : மதுரை மாவட்டம் கீழவளவு பகுதிகளில் பிஆர்பி நிறுவனத்துக்கு சொந்தமான கிரானைட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஆளில்லாத சிறிய ரக விமானம் மூலம் ஆய்வு செய்யும் பணி இன்றும் இரண்ட
மேலூர், செப்., 08 : மதுரை மாவட்டம் கீழவளவு பகுதிகளில் பிஆர்பி நிறுவனத்துக்கு சொந்தமான கிரானைட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஆளில்லாத சிறிய ரக விமானம் மூலம் ஆய்வு செய்யும் பணி இன்றும் இரண்டாவது நாளாக நடைபெற்றது.
ஆளில்லாத விமானம், ஓலமலையைச் சுற்றி 3 முதல் 4 கி.மீ. சுற்றளவுக்கு பறந்து கிரானைட் கற்களை அளவிட்டு படங்களையும் எடுத்தது.
ஓலமலையைச் சுற்றியுள்ள பகுதியில்தான் மத்திய அமைச்சர் ஆழகிரியின் மகன் துரை தயாரிநிதி பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் குவாரிகளும் இருக்கின்றன. இப்பகுதியில் உள்ள கிரானைட் கற்களையும் ஆளில்லாத விமானம் மூலம் படங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த பணியில், உதவி ஆட்சியர்கள் ஜெயசிங் ஞானதுரை, இளங்கோவன், குணசேகரன் ஆகியோர் ஈடுபட்டனர். ஆளில்லாத விமானத்தை இயக்கும் பணியில் அண்ணா பல்கலை பேராசிரியர் செந்தில் குமார் மற்றும் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 5 பேர் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே அளவிடப்பட்ட கிரானைட் கற்களை மதிப்பிடும் பணியில் கனிம வளத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.