மஞ்சள் ஏலத்தில் முறைகேடு : ஈரோடு விவசாயிகள் சாலை மறியல்
ஈரோடு, செப்., 13 : ஈரோடு மஞ்சள் சந்தையில் இன்று நேற்றைய விலையை விட சுமார் 1000 ரூபாய் அளவுக்கு குறைவாக மஞ்சள் ஏலம் போனதால் விரக்தி அடைந்த விவசாயிகள் ஏலத்தை முழுமையாக ரத்த செய்தனர். இதையடுத்து, ஈரோடு -
ஈரோடு, செப்., 13 : ஈரோடு மஞ்சள் சந்தையில் இன்று நேற்றைய விலையை விட சுமார் 1000 ரூபாய் அளவுக்கு குறைவாக மஞ்சள் ஏலம் போனதால் விரக்தி அடைந்த விவசாயிகள் ஏலத்தை முழுமையாக ரத்த செய்தனர். இதையடுத்து, ஈரோடு - பவானி பிரதானச் சாலையில், மஞ்சள் ஏலத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய தினம் மஞ்சள் ஏலத்தின் போது முதலில் அதிகப்படியான தொகையை சொல்விட்டு, பிறகு குறைவான தொகைக்கு ஏலம் கேட்பதாக கூறிய விவசாயிகள், இதில் முறைகேடு நடப்பதாகப் புகார் கூறுகின்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் சுமார் 150 விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.