சிவகங்கையில் ராஜபட்ச உருவபொம்மையை எரித்த மதிமுக.வினர் கைது
சிவகங்கை, செப்.21: இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கையில் அவரது உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்திய மதிமுக.வைச் சேர்ந்த 35 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கைய
சிவகங்கை, செப்.21: இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கையில் அவரது உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்திய மதிமுக.வைச் சேர்ந்த 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கையில் மதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் அரண்மனைவாசல் முன்பு ராஜபட்ச உருவபொம்மையை அக் கட்சியினர் எரித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் இந்தியா வந்துள்ள ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இப்போராட்டத்தில் மதிமுக மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சார்லஸ், தங்கப்பாண்டியன், நகர்ச் செயலாளர் சுந்தரபாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் பெரியசாமிராஜா, தீபன் சக்ரவர்த்தி, பக்ருதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின் ராஜபட்ச உருவபொம்மையை எரித்ததாக மதிமுக.வைச் சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்தனர்.