நாமக்கல், செப்.21: நாமக்கல் அருகே பள்ளிப்பாளையம் பகுதி மற்றும் ஏடர்பாளையம் பகுதிகளில், விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
பள்ளிப்பாளையம் பகுதியில் மாலை 6 மணி அளவில் விநாயகர் சிலைகளுடன் பலர் ஊர்வலமாகச்சென்றனர். சிலைகளை ஆற்றில் கரைக்க முயன்றபோது, ஆற்றில் நீர் அதிகமாக இருந்ததால், நீரில் மூழ்கி 2பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்து, மாலை 4 மணி அளவில் ஏடர்பாளைய அணைக்கு விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற சுரேஷ்குமார், சிவசங்கர் என்ற இருவர் நீரில் மூழ்கினர். இவர்களது உடல்களை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.