டீசல் விலையை குறைக்காவிட்டால் அக்.20-ல் போராட்டம்: லாரி உரிமையாளர்கள் சங்கம்
தூத்துக்குடி, செப். 23: மத்திய அரசு டீசல் விலையை குறைக்காவிட்டால் அகில இந்திய மோட்டார் சங்க ஆலோசனைப் படி அக்டோபர் 20-ம் தேதி மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் தூத்துக்குடி மாவட்ட லாரி உரிமையாள
தூத்துக்குடி, செப். 23: மத்திய அரசு டீசல் விலையை குறைக்காவிட்டால் அகில இந்திய மோட்டார் சங்க ஆலோசனைப் படி அக்டோபர் 20-ம் தேதி மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் தூத்துக்குடி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே. சாமுவேல்.
தூத்துக்குடி மாவட்ட லாரி உரிமையாளற்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் கே. சாமுவேல் தலைமை வகித்தார். செயலர் பி. தாத்தாசாமி, பொருளாளர் வி. சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்குப் பிறகு சங்கத் தலைவர் கே. சாமுவேல் இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.