புவனகிரி அருகே வயலில் அழுகிய நிலையில் ஆண் சடலம்
புவனகிரி அருகே ஆலம்பாடி எனுமிடத்தில் வயலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.
புவனகிரி அருகே ஆலம்பாடி எனுமிடத்தில் வயலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.
இறந்தவர் யார், எந்த ஊர் எனத் தெரியவில்லை. தகவல் அறிந்த புவனகிரி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா என்பது குறித்தும், இவர் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.