ஈரோடு அருகே மின்கம்பம் சரிந்து ரயில் போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு அருகே ரயில் பாதையில் மின் கம்பம் சரிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு அருகே ரயில் பாதையில் மின் கம்பம் சரிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு அருகே தொட்டிப்பாளையம் ரயில் நிலையத்தில், ரயில் மின்கம்பம் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. இதனால், எர்ணாகுளம் பெங்களூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால், ரயில் போக்குவரத்தில் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தப் பாதையில் வரும் அனைத்து ரயில்களின் போக்குவரத்து நேரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இன்னும் சில ரயில்களும் தாமதமாகச் செல்லும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினார்.