தற்போதைய செய்திகள்

விருதுநகர்-அழகாபுரி சாலையில் இடிந்த பாலங்களைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

விருதுநகர்-அழகாபுரிக்கு வரையில் இச்சாலை முக்கிய போக்குவரத்து இணைப்பு சாலையாக இருந்து வருகிறது. இக்குறிப்பிட்ட சாலை மதுரை-செங்கோட்டை சாலை,

எஸ். பாண்டியன்

விருதுநகர்-அழகாபுரி சாலையில் வாகன விபத்துக்களை ஏற்படுத்தும் தடுப்புச் சுவர் இல்லாத பாலங்களை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்களிடையே புகார் எழுந்துள்ளது.

விருதுநகர்-அழகாபுரிக்கு வரையில் இச்சாலை முக்கிய போக்குவரத்து இணைப்பு சாலையாக இருந்து வருகிறது. இக்குறிப்பிட்ட சாலை மதுரை-செங்கோட்டை சாலை, பேரையூர்-தேனி சாலை, சிவகாசி, வத்திராயிருப்பு உள்ளிட்ட முக்கிய சாலைகளின் இணைப்புச் சாலையாக உள்ளது. இச்சாலையில் நாள்தோறும் அரசு பேருந்துகள், சரக்கு என ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது.

இக்குறிப்பிட்ட சாலையில் சிறு ஓடைகளின் குறுக்கே சிறிய அளவிலான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இப்பாலங்கள் தரமாக கட்டப்படாததால் இரவு நேரங்களில் வேகமாக வரும் வானங்கள் மோதி தடுப்புச் சுவர்கள் உடைந்து காணப்படுகிறது. அதோடு, இச்சாலைப்பகுதியில் களிமண் தரையாக இருப்பதால் சாலையின் நடுப்பகுதிகளில் செங்குன்றாபுரம், எல்கைப்பட்டி ஆகிய பகுதிகளில் பாலப் பகுதியில் இதேபோல் திடீர் பள்ளங்கள் உருவாகியுள்ளது.

இதுபோன்ற காரணங்களால் இப்பகுதியில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலையேற்பட்டுள்ளது. மேலும், வெளியூர்களிலிருந்து வருகிற வாகன ஓட்டுநர்களுக்கு இச்சாலையின் தன்மை, எங்கு பாலம் உள்ளது என்பது போன்ற விவரங்கள் தெரியாததால் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல், இருசக்கர வாகனங்களில் வருகின்றவர்கள் பாலச் சுவர் இல்லாததால் ஓரமாக வந்து பள்ளத்திற்குள் பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றனர் என வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் கணேசன் கூறுகையில், இச்சாலைப் பகுதி பாலங்களில் வாகன விபத்துக்களால் சேதமடைந்து காணப்படுகிறது. இதற்கு முன்பு வரையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து, தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டுக்கு மாறியுள்ளது.  அதோடு, விருதுநகர்-வத்திராயிருப்பு வரையில் செல்லும் 37 கி.மீ சாலையையும் அகலப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதில், சிறியளவிலான பாலங்கள் அனைத்தும் அகற்றம் செய்யப்பட்டு பெரிய அளவிலான பாலம் மற்றும் நெகிழ்வு தன்மையோடு காணப்படும் சாலையோர  களிமண் தரையை பலப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT