முகப்பு
தற்போதைய செய்திகள்

அருப்புக்கோட்டை கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல்: 8 பேர் கைது

புதன்கிழமை இரவு 11 மணிக்கு கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 8 பேரை போலீஸôர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On : 11 ஏப்ரல், 2013 at 3:56 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:45 PM

அருப்புக்கோட்டை அருகே முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தச் செல்லும் போது புதன்கிழமை இரவு 11 மணிக்கு கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 8 பேரை போலீஸôர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை மாலையில் அக்னிச் சட்டி எடுக்கும் வைபவம் நடைபெற்றது. அதில், அருப்புக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள தெருவைச் சேர்ந்தவர்கள் மேள தாளத்துடன் அக்னிச் சட்டி எடுத்துச் சென்றுள்ளனர். 

அப்போது இந்த வழி எப்படி மேள தாளத்துடன் வரலாம் என கேட்டு அதே தெருவைச் சேர்ந்த தினேஷ் மற்றும் மணிகண்டன் கோஷ்டியினர் குடிபோதையில் வாய்த்தகராறு செய்தனர். பின்னர் இரு கோஷ்டியினரும் விறகு கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து, அப்பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை விரைந்து வந்தனர்.

Advertisement

இது தொடர்பாக மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் மாதவராஜ், கோகுலன், திணேஷ், நாகராஜ் மற்றும் ராஜங்கம் ஆகியோர் மீதும், அதேபோல் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, பாலசந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.