இலங்கைக் கடற்படை தாக்குதலில் நாகை மீனவர்கள் 4 பேர் காயம்
இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் நாகப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் நாகப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த செல்வம், மாரியப்பன், விஜயகுமார் சவுந்திரராஜன் என 4 மீனவர்கள் ஒரு படகில் நேற்று மாலை 4 மணிக்கு கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, இலங்கை கடற்படையினர் உருட்டுக்கட்டைகளால் மீனவர்களைத் தாக்கி, இங்கே மீன்பிடிக்கக்கூடாது என்று கூறி மிரட்டினராம். பின்னர், மீண்டும் இந்தப் பகுதியில் மீன்பிடிக்க வந்தால் துப்பாக்கியால் சுட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். நேற்று நள்ளிரவு கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து புகார் தெரிவித்தனர். காயமடைந்த 4 மீனவர்களும் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.