முகப்பு
தற்போதைய செய்திகள்

அம்மா திட்டம் குறித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்: ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தகவல் 

பொது மக்களைத் தேடி வருவாய்த் திட்டம் என்ற அம்மா திட்டம் கிராமங்களில்  நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அரசு நலத்திட்டங்களை

Updated On : 12 ஏப்ரல், 2013 at 3:55 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டத்தில் மக்களைத் தேடி வருவாய்த்திட்டம் என்ற அம்மா திட்டத்தை கிராமங்களில் பொதுமக்களிடையே செயல்படுத்தும் வகையில்  விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்:  

பொது மக்களைத் தேடி வருவாய்த் திட்டம் என்ற அம்மா திட்டம் கிராமங்களில்  நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அரசு நலத்திட்டங்களை பெறுவதற்காக கிராமங்களில் இருந்து நகரத்தில் உள்ள வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் ஆட்சியர் அலுவலகம் என அலைந்து வருகின்றனர்.

இதற்கான நேரம், செலவு அன்றாட வேலை இழப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு வருவாய்துறை அலுவலர்கள் கிராமங்களில் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று குறைகள் மற்றும் நலத்திட்டம் பெறுவதற்கான மனுக்களை பெறுகிற மக்களை தேடி வருவாய்த் தி்டடம் என்கிற அம்மா திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களின் விவகார எல்கையில் குறிப்பிட்ட கிராமத்தை தேர்வு செய்து வாரந்தோறும் செவ்வாய்கிழமை வருவாய்த்துறை சார்பி்ல் பொதுமக்கள் முன்னிலையில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இம்முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களான பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படும் அனைத்துச் சான்றிதழ்களுக்கும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படும். அதை உடனடியாக பரிசீலித்து உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுவதற்கு வருவாய்த்துறை பணியாளர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். இத்திட்டத்திற்கு பொதுமக்களும்  ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் கோரிக்கை மனுக்கள் கொடுத்தால் உடனே பரிசீலனை செய்து உதவிகளை வழங்க வேண்டும். மேலும், இதுகுறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால், வருவாய்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு செல்லும் போது குறைந்த அளவில் மனுக்கள் வருவதாக புகார் வந்துள்ளது. அதனால் இம்மாவட்டத்தில் 6 மாதத்திற்குள் இத்திட்டத்தை முடிப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கும் வருவாய் துறை அலுவலர்கள் கிராமங்கள் தோறும் விழிப்புணர்ச்சியே ஏற்படுத்த   வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.