முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோடு அருகே தாய் மகளைக் கட்டிப்போட்டு 3 சவரண் நகை கொள்ளை

ஈரோடு அருகே நல்லித்தோட்டம் என்ற இடத்தில் தாய், மகளைக் கட்டிப் போட்டு 3 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:15 AM
பகிர்:

ஈரோடு அருகே நல்லித்தோட்டம் என்ற இடத்தில் தாய், மகளைக் கட்டிப் போட்டு 3 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் உள்ள தனியார் கருத்தரிப்பு மைய மருத்துவமனையில் கருமுட்டை சேகரிப்பு ஊழியராகப் பணி புரிகிறார் சாந்தா (35). இவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இன்று காலை 9 மணி அளவில் இவரது வீட்டுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு கருவி விற்பனை செய்வதாகச் சொல்லி வந்த மர்ம நபர்கள், இவரையும் இவரது மகளையும் கட்டிப் போட்டு, அவர்கள் அணிந்திருந்த 3 சவரன் நகை, எல்சிடி., ஸ்கூட்டி ஆகியவற்றைத் திருடிக் கொண்டு சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.